| இருந்துமே சமாதியது பூசைகொண்டு எழிலாக நான்வருகு நாளுமட்டும் திருந்தவே என்சீஷா பிராணநாதா தெருள்கலையில் தேர்ந்ததொரு சித்துபாலா பொருந்தவே யுபதேசம் மிகவுங்கேட்டு பொங்கமுடன் சமாதிதனிலிருந்துகொண்டு வருந்தவே நான்வருகும் நாளையெண்ணி வளமுடனே நீநினைத்து நிற்பீர்தானே |