| பாரேதான் வெகுகாலஞ் சமாதிபக்கல் பாரினிலே வருவாரும் போவாருண்டு நேரேதான் அவர்களிடம் வார்த்தைபேசேன் நேர்யுடன் சமாதியிடம் பள்ளிகொள்வேன் கூரேதான் சமாதியிடம் யிருந்துகொண்டு கொப்பெனவே தேவர்வருங்காலமட்டும் ஊரேதான் போகாமல் காத்திருந்து உறுதியுடன் சேர்வையது கண்டிட்டேனே |