| வினையான நல்வினையு முனக்கிருக்க விட்டகுறை தீவினைக்கியாளதாக்கி தினையளவு பொன்னதுவும் வுனக்குக்கூறார் தீங்கினையே விளைவிப்பார் கருமிமாண்பர் சினங்கொண்டு வலியவே வாதுபேசி சீரான வுபதேசம் கிடைப்பதற்கு மனங்கொண்டு தொடருவார் உந்தன்பக்கல் மர்மத்தைக்காட்டாதே மன்னாகேளு |