| பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பாங்குடனே காலாங்கி நாதர்தாமும் நேருடனே சமாதிக்கு சென்றபோது நேர்மையுடன் வுபதேசம் பின்னுஞ்சொல்வார் சீருடனே எந்தன்மேல் பட்சம்வைத்து சீவியகாலமது வுள்ளமட்டும் பாருடனே எந்தனையும் சித்தர்தாமும் பட்சமுடன் கார்க்கவென்று பதஞ்சொல்வாரே |