| அன்றான காயாதி கற்பந்தன்னால் அழியாது தந்தேகமழியாதென்றும் குன்றான மலைபோலே யிருப்பேனென்றும் குவலயத்தி லின்னும்வெகுவதிசயங்கள் வென்றிடவே சமாதிதனி லிருப்பேனென்று வீரமுடன் தாமுரைத்தார் சீஷருக்கு சென்றிடவே இனிதிரும்பி வருவதில்லை சேர்வையது வுலகுநாள் முடிவுமாச்சே |