| மயங்கியே நிற்கையிலே அசரீரிவாக்கு மானிலத்திலதிகமதாடீநு கேட்கலாகும் தியங்கியே சப்தமது வடங்கிப்போச்சு திறமான கூட்டத்தார் சிலதுகாலம் புயங்கமுடன் அங்கிருந்தார் சீஷவர்க்கம் புகழான சித்தொளிவு வருகுமட்டும் தயங்கியே கார்த்திருந்தார் சமாதிதன்னில் தாரணியில் சித்துவரும் நாளுமாச்சே |