| பேசுமே மிருகமெல்லாஞ் ஞானங்கூறும் பேரான மலைதனிலே சோதிகாணும் ஏசுவின்றன் சீஷரெல்லாம் எதிர்நிற்பார்கள் எழிலான குருடரெல்லாங் கண்திறப்பார் மாசில்லா நிலவதுவும் சூரியன்போல் மானிலத்தில் ஊமையவன் பேசுவான்பார் தேசிபுகழ சப்பானி நடப்பான்பாரு தேசத்தில் மகிமையது மிகவுண்டாமே |