| வெடித்தபின்பு கைலாச சட்டநாதர் மேன்மையுடன் மேதினியில் வந்தாரங்கே நடிக்கவே நாதாந்த கூட்டத்தார்கள் நன்மையுடன் கிட்டிவைத்து நமஸ்கரித்து துடிப்புடனே கைலாச சட்டர்தம்மை தொழுதிரங்கி தெண்டனிட்டு வணக்கங்கூற கடிப்பிடிவோன் முரசோடு வாத்தியங்கள் கருத்துடனே தானகைத்து தொழுதிட்டாரே |