| வருவாரே காயாதி கற்பங்கொண்ட வரமுடைய ரிஷியாரும் வருவாருண்டோ குருவான எனதையர் கடாட்சத்தாலே கொற்றவனே வுபதேசம் பெற்றேன்யானும் அருளான வுபதேசங் கொண்டதாலே அவனியிலே மறுபடியும் வந்தேனென்று திருவான மனோன்மணியாள் கடாட்சம்பெற்று திரும்பி வந்தேன் மாணாக்காள் என்றிட்டாரே |