| ஆச்சப்பா பனிரண்டுங் கடந்துபோச்சு அப்பனே மச்சமுனி சித்துதாமும் மூச்சடங்கி யிருந்தாரே சித்துதாமும் மூதுலகில் வருவதற்கு நாளுமாச்சே பாச்சலுடன் மச்சமுனி ரிஷியார்தாமும் பாங்குடனே வருவதற்கு முன்னதாக மாச்சலுடன் சீஷவர்க்கமாயிரம்பேர் மதிப்புடனே சமாதிக்கு வந்திட்டாரே |