| நீங்கியே சமாதியது போகவென்று நீனிலத்தில் மச்சமுனிரிஷியார்தானும் நோக்கமுடன் குழிதோண்ட விடையுந்தந்து நுணுக்கமுடன் சீஷருக்கு வுபதேசித்து நார்க்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்தம்மை நயமுடனே காணுதற்கு எண்ணங்கொண்டு தூக்கமுடன் சிவயோகந் தன்னில்நின்று சத்தமுடன் குழிதனிலே படுத்தார்தாமே |