| புண்ணியனாஞ் சிலகால மங்கிருந்து பொங்கமுடன் யாகமது முடிந்தபின்பு திண்ணமுடன் சமாதிக்குப் போகவென்று திட்டமுடன் வரமதுவுங் கொடுத்தபின்பு வண்ணமுடன் கபிலமுனி சித்துதாமும் வளமுடனே பின்னுமே சமாதிக்கேக எண்ணமுடன் தன்மனதில் நினைக்கும்போது எழிலான சித்துமுனி கூறுவாரே |