| இருந்தாரே கமலமுனி சித்துதாமும் எழிலாக ரிஷியினிட மிருக்கும்போது பொருந்தவே ரிஷியாரும் அன்புகூர்ந்து பொங்கமுடன் சமாதிக்கு இடமுஞ்சொல்லி குருந்தமுடன் உபதேசம் யாவும்கூர்ந்து குவலயத்தில் சிலகாலம் காட்சிகாண வருந்தியே குபரனார் யாகவானும் வரமதுவும் கொடுத்தாரே புண்ணியவானே |