| உறையென்ற போதையிலே முனிவர்தாமும் ஓகோகோ நாதாந்த சித்துவென்று சிறையிட்ட சாபமது தீர்க்கவென்று சித்தொளிவு வந்தாரோயென்றுசொல்லி முறையிட்டு அவரிடத்தில் குறைகள்சொல்லி முத்திபெரும் வழிதனையே அடையவென்றும் குறையிட்டு கேட்பதற்கு மனதிலெண்ணி கொப்பெனவே கொங்கணருங்கூறுவாரே |