| ஒன்றுமே யில்லையப்பா வுலகுதனில் உயிரோடே சமாதியிலே இறங்கியென்ன கன்றுதான் தாடீநுதேடுங் கதையைப்போல காசினியில் அவரவர்கள் சமாதிதேடி தென்றிசையில் நதிமலையி லனேகஞ்சித்தர் சீருடனே யிப்படியே சமாதிகொண்டார் வென்றிடவே கொங்கணரு நீருமிங்கே வேகமுடன் சமாதிக்கு வந்திட்டீரே |