| ஓதவே சமாதியின்மேல் பாறைதானும் வுத்தமரே வெடிக்கவல்லோ தம்மைக்கண்டேன் போதமுள்ள ரிஷியாரே யடியேனுக்கு பொங்கமுடன் காட்சிதர வேண்டுமென்று நீதமுடன் கௌதமதிரிஷியர்தாமும் நீதியுள்ள கொங்கணனார் பாலனுக்கு வேதமுதலாகமங்கள் விரிநூல்யாவும் விருப்பமுடன் போதித்தார் ரிஷியார்தாமே |