| பார்க்கவே பூரணந்தான் எளிதோமைந்தா பரிவான தசதீட்சைக் குருவைக்காரு ஆர்க்கவே அவர்மனது வந்துதானால் ரண்டிலே சித்தியாம் அடைந்துகூடும் நோக்கவே இதைவிட்டு மத்தில்சென்று நினைவுகெடப் பானமுண்டு நிலைத்துவுண்ணார் தாக்கவே கூசாதே சற்குருவைத்தேடித்தான் அசையாமல் உடல்பொருளுமாவிநீயே |