| ஆட்டவென்றால் சித்தருமே ஞானம்பெற்று அவனியிலே வெகுகாலமிருப்பாரப்பா கூட்டமுடன் பாம்பாட்டி சித்தர்தாமும் குவலயத்தில் மாந்தரிருசீஷனாகி நாட்டமுடன் தாமறிந்த ஞானமெல்லாம் தன்மையுடன் சீஷருக்கு உபதேசித்தார் வாட்டமுடன் சீஷருக்கு உபதேசித்து வாகாகச் சமாதியிலே யடைந்தார்பாரே |