| கண்டாரே கைலாச சட்டர்தன்னை கருத்தினிலே யவர்பாதம்தொழுகவென்று தெண்டமுடன் அடிபணிந்து சிரங்குவித்து தெளிவுடனே அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது பண்டுடனே காயாதிவர்க்கங்கொண்டு பாங்கான பாலுடனே பழமுங்கொண்டு தண்டுளப மாலையணி துளசிகொண்டு சர்ப்பனையாயர் சித்துதமை கண்டார்தாமே |