| எழுதவென்றால் நூலுரையோன் சொல்லும்நீதி எழிலான ஆக்கியொன்றான் பகரும்நீதி பழுதறவே எழுத்தாணிக் கைபிடித்து பாங்குபெற கணபதியைக் காப்புமிட்டு தொழுதுமே சிரங்குனிந்து கைகுவித்து தொல்லுலகில் வாணரெல்லாம் காப்பிட்டார்கள் உழுதுபயிரிடுங் குடியானர்தாமும் வுத்தமர்கள் மானிலத்தில் தொழுவார்பாரே |