| உரிக்குமடல் தாரமதை கன்னத்துள்ளே ஒருமூன்று சாமமதை யெரித்துவாங்கி முருக்கிலையுங் கரிசாலைப் பழச்சார்விட்டு மெழுகுபட அரைத்து பழந்துணியிலூட்டு அருக்கனிட காடீநுந்தகழி வெண்டிலேறி அங்கியிட்டுப் புகைவாங்கி முக்கால்போக கருக்கவே மறைப்பணமும் பிடிக்கவேதான் சுவாசமொடு மந்தாரக்காசம்போமே |