| சூதபற்பம் கெந்திவெங்காரநேரே தூக்கியரை தேள்கொடுக்கு குமரியாலும் வீதமொரு நாளரைப்பின் னெடுத்துருட்டி வியாதியறிந்து அனுபானத்திலீய வாதமுதல் கணரோகம் ருத்திரவாயு மார்வலியுங் குன்மவகை சூலையாறும் சீசமதைக் கொண்டுவரு மாந்தர்காசம் செல்லுமது இம்மருந்தின் திறமையாமே |