| மறைந்ததொரு பொருளதனை மானிலத்தில் மாளாமல் சேர்த்துவைத்து மாண்டுபோனார் திரைப்புடனே சாத்திரங்களதிகங்கற்று தீராத பலவினையைக்கட்டறுத்து முறைப்படியே ஞானவரம் பெற்றேனென்று மூர்க்கமுடன் கோபமதை மறுத்தேனென்றும் குறைப்படியே குவலயத்திலெந்தநாளும் மானிடர்கள் கெட்டார்தந்தே |