| பாரேதான் காயாதிகற்பவுண்டை பாரினிலே கொண்டவர்க்கு பலனைக்கேளிர் நேரேதான் ஏழானைப்பலனுண்டாகும் நேர்மையுடன் மானிலத்தில் இருக்கலாம்பார் சீரேதான் சிவயோகந் தன்னிற்சென்றால் சின்மயத்தின் அஷ்டாங்கங் காணலாகும் வேரேதான் காண்பதுவும் வொன்றுமில்லை வேதாந்தச் சுடரொளியைக்காணலாமே |