| பார்க்கவென்றால் தாம்பரத்தின் பற்பந்தன்னை பாங்குடனே நெல்லிடைதான் கொண்டபோது தீர்க்கமுடன் அனுபான மறிந்துகொண்டால் திறமுடனே தேகமது கற்றுணாகும் சேர்க்கமுடன் வாயுவென்ற தென்பதும்போம் செயலான பித்தமது நாற்பதும்போம் மூர்க்கமுடன் சேத்துமங்கள் தொண்ணூற்றாறும் முட்டோடே போகுமடா முடிவுதானே |