| சித்தனாடீநு பிறந்தாலும் மதிகள்வேண்டும் சீறலென்ற சினமதுவைத் தள்ளவேண்டும் பத்தியுடன் பதாம்புயத்தை எந்தநாளும் பட்சமுடன் மனந்தனிலே நினைக்கவேண்டும் நித்தியமும் பரவெளியில் நிற்கவேண்டும் நீடாழி யுலகாசை யொழிக்கவேண்டும் முத்தியுடன் அஷ்டமா சித்திதன்னை மூவுலகில் பெறுபவனே யோகியாமே |