| திண்ணமா மின்னமொரு கருமானங்கேள் திகழான வர்ணமென்ற போக்குசொல்வோம் வண்ணமுடன் பஞ்சவர்ண விதங்கள் சொல்வோம் வகுப்புடனே யதிற்பிறந்த வர்ணம் நான்காம் நண்ணமுடன் வாயுவென்ற இரும்புதன்னில் நலமான வர்ணமது ரூபபேதம் கண்ணபிரான் வர்ணமது போலேயாகும் காசினியில் சித்தர்செடீநுயும் வேதையாச்சே |