| ஏற்றியே வுருக்குமுகம் தன்னிலேதான் என்மகனே துருத்தியது நாலதாகும் போற்றியே வாலாம்பிகை தனைநினைத்து பொங்கமுடன் மூசைதனை நெருப்பிலிட்டு தூற்றியே கரியதனை மேலேகொட்டி துப்புரவாடீநு மூசையது யழுகுமட்டும் நாற்றிசையும் தீபரக்க வூதுவூது நாயகனே சத்தெல்லாம் முத்துமாமே |