| கணக்கில்லை காலன்வந்தணுக மாட்டான் காசினியில் வெகுகால மிருக்கலாகும் பிணமாகி மூச்சடங்கி இருந்திட்டாலும் பேருலகில் உன்னையொரு சித்தனென்பார் ஷணநேரம் வாசியைநீ நடத்திட்டாலும் சதாசிவன்தான் நீயென்று சொல்லுவார்கள் மணமுடனே பூமிதனில் வாழலாகும் மண்ணுலகில் வேந்தரெல்லாம் நடுங்குவாரே |