| கொடுவென்று கேட்கையிலே சித்துதாமும் கொப்பெனவே எந்தனுக்குச் சாபந்தீர்ந்து படுமுன்னே சரக்கெல்லாம் கட்டிப்போக பாரினிலே காயாதிகற்பந்தானும் தொடுகுறி போலெந்தனுக்கு வுளவுஞ்சொல்லி தோஷமது போவதற்கு முறையுஞ்சொல்லி விடுவகலும் பிணிநீங்கக் காயகற்பம் விருப்பமுடன் வாக்களித்தார் முறையுந்தானே |