| ஏத்தியே நடுமையம் தானிறுத்தி எழிலுடனே சரவுலையை வூதும்போது சாத்திரத்தி லுள்ளபடி தப்பாகாது தகைமையுடன் சத்ததுவும் யீயமாகும் கூத்தனுமே தான்நடுங்கும் வேதைமார்க்கம் குவலயத்தில் ஒருவரால் கூறப்போமோ நேத்தியுடன் சத்ததுவை எடுத்துப்பாரு என்னசொல்வேன் மக்களா யின்னுங்கேளே |