| தோர்க்காது பதுமையது வாளினாலே தொல்லுலகில் பதுமையது மேலேநோக்கும் பார்க்கவே லோகத்து மாந்தருக்கு பாங்கான செப்பிடு ஜெகஜாலந்தான் ஏர்க்கவே வதிசயத்தை மிகவேகாட்டும் எழிலாக பிடிப்பார் மாந்தர்கண்டீர் மார்க்கமுடன் மாந்திரீகம் மென்பார்காணீர் என்மகனே ஜாலமென்ற வித்தைதானே |