| தானான கற்பமது வுண்ணும்போது சதாகாலம் நிஷ்டையிலே இருக்கலாகும் வேனான கற்பத்திற் குறுதிசொல்வேன் வெளியங்க மாகவல்லோ திரியவேண்டாம் பானுமதி சூரியனும் பார்க்கவொண்ணா பாலகனே யொடுக்கமதில் இருக்கவேண்டும் தேனான புளிபுகையுந் தள்ளவேண்டும் தேசமதில் காயத்தை நிறுத்துவாயே |