| கேட்கவே யவர்தமக்கு களிப்புகொள்ள கெவனமுடன் குளிகையென்ற லேகியங்கேள் சூட்சமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று தொல்லுலகில் அடியேனுங் கருணைகூர்ந்து நீட்டமுடன் கோரக்கர்மூலி தன்னைநேர்மையுடன் தானெடுப்பாடீநு சேர்தான்ரெண்டு வாட்கமல வட்டமென்ற பாண்டந்தன்னில் வகையுடனே காலாங்கி சொற்படிக்கே |