| மாட்டவே நடுக்கம்பந்தன்னிலேதான் மதிப்புடனே மேற்சிகரம்நின்றுகொண்டு ஓட்டமுடன் கயறுதனைப் பிடித்துக்கொண்டு ஓங்கார சத்தமுடன் சுத்திவந்து நாட்டமுடன் தரணிதனை அண்ணாந்துபார்த்து நயமுடனே குளிகைதனை வாயிற்பூண்டு தேட்டமுடன் துதிக்கையிலே கரணம்தன்னை தெளிவாகக் காணுதற்கு ஜாலங்கேளே |