| ஆச்சப்பா ஜெகஜால மாளிதன்னில் அப்பனே யாம்கோடிவரைதான்சொல்வோம் பேச்சப்பா பேசுதற்கு என்னசொல்வோம் பேரான செத்தவர்பேர் கேட்கச்சொல்லி கூச்சலுடன் பின்னிருந்த பிரணவத்தை குறிப்புடனே மாறியல்லோ குறளிதன்னால் மூச்சிருந்து பேசுமது பேச்சைப்போல முன்னிருந்து பேசும்வகை மொழிசொல்வேனே |