| மாட்டவே கண்ணாடி வாசலுக்குள் மார்க்கமுடன் குழலொன்று நிறுத்தியங்கே நீட்டமுடன் எழுநூற்றிருபதுக்கும் நெடிதான குழலொன்று வெவ்வேறாகும் வாட்டமுடன் கண்ணாடி சுற்றோரந்தான் வாகுடனே காந்தமென்ற கம்பிதானும் தேட்டமுடன் தானமைத்து நடுமையத்தில் தெளிவாக குழல்தனிலே பின்னிப்போடே |