| பாகமென்றால் பாகமது சொல்லொண்ணாது பாவையுட கருவான செயநீராகும் போமென்ற செயநீரும் பிண்டமாகும் பொங்கமுடன் பனிக்குடமாஞ் சலமேயாகும் வேகமென்ற பூநிரைவிட்டு மைந்தா விருப்பமுடன் சலமதினில் கரைத்துநீயும் சாகமுடன் தசதீட்சை யிப்படியேயாகும் சட்டமுடன் செடீநுதுவந்தால் பூர்க்கும்பாரே |