| சித்தான காலாங்கி கிருபையாலே சென்றேனே குளிகையது பூண்டுகொண்டு சத்தான லோகமெல்லாஞ் சுத்திவந்தேன் சாங்கமுடன் காணாத காட்சியெல்லாம் முத்தான காண்டமது மூன்றுக்குள்ளே முடிவுபெற பாடிவைத்தேன் லோகமார்க்கம் நித்தமுமே காலாங்கி யாமுந்தானும் நிதந்தோறும் பூசையிலே நினைக்கின்றேனே |