| பார்க்கையிலே தட்சணாமூர்த்தியாரும் பாடல்களை வெகுவாக மறைத்துப்போட்டார் சேர்க்கமுடன் வாதத்தை முன்பின்னாகச் செப்பினார் திரட்டுமுதல் வுளவுமார்க்கம் மூர்க்கமுடன் மருந்துவகை பாஷாணத்தை முன்பின்னால் பேர்மாற்றி பேருறைத்தார் தீர்க்கமுடன் சொன்னதினால் மாந்தர்யாவும் தேசத்தில் சுட்டலைந்து கண்கெட்டாரே |