| பாரேதான் நவரத்தின மலையுமுண்டு பாலகனே வெகுகோடி ரிஷிகள் கண்டேன் மேரேதான் மேருவுமிதற்கீடல்ல மெத்தவுண்டு வதிசயங்கள் சொல்லப்போமோ நேராதான் வாக்கினையின் பக்கல்சென்றேன் நெடிதான வடக்குபுரம் கொண்டுசென்றார் சீரேதான் ஆக்கினைகள் மெத்தவுண்டு சிறப்புடனே கண்டுமல்லோ திடுக்கிட்டேன் |