| பாரேதான் பராபரியாள் அருளும்வேண்டும் பாருலகில் சித்தர்முனி கடாட்சம்வேண்டும் சீரேதான் விட்டகுறை காணவேண்டும் சிறப்பான தொட்டகுறை நேரவேண்டும் நேரேதான் லலாட்ட கருவிருக்கவேண்டும் நேர்புடனே இதுவெல்லாம் கூடினாக்கால் கூரேதான் நினைத்ததெல்லாம் சித்தியாகும் கொற்றவனே நீயுமொரு சித்தனாமே |