| இருந்திட்டார் வெகுகோடி காலமப்பா எழிலான சித்தர்முனி தம்மைப்போல குருந்திட்ட சமாதிதனிலிருந்துகொண்டு குருவான போகரைத்தான் மனதிலெண்ணி திருந்திட்ட சிவயோகந்தன்னிற்சென்று தீரமுடன் காயத்தை நிருத்திக்கொண்டு பொருந்திட்ட மாகவல்லோ வாசிதன்னை பூட்டியே பூட்டியே யுள்ளடக்கி புரிந்திட்டாரே |