| பண்ணவே காயாதிகற்பவுண்டை பாருலகில் நாதாக்கள் ரிஷிகள்தாமும் வண்ணமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று வாகுடனே சீனபதிதேசத்தாற்கு திண்ணமுடன் இப்பாகம் செடீநுதுவைத்தேன் திறமையுடன் காயாதிகற்பந்தன்னை நண்ணமுடன் வுண்டுமல்லோ மாந்தர்தாமும் மானிலத்தில் சித்தரைப்போ லிருந்திட்டாரே |