| ஓதுவார் பொருளறிந்த கள்ளனானால் உத்தமனே யவர்மனதை தேத்திநீதான் நீதியெனும் சன்மார்க்க வலையிற்சென்று நித்தமுடன் பெரியோர்க்கு தொண்டுபண்ணி சாதியிலே தாடிநந்தவரா யிருந்திட்டாலும் தவநிலையில் பெரியவரா மென்றேயெண்ணி பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாலித்தா லுந்தனுக்கு பண்பதாமே |