| உன்னியே நிற்கையிலே வாமிவந்து உத்தமனே யுந்தனுக்கு வழியுஞ்சொல்வாள் கன்னியெனும் மஹேஸ்பரியாள் நிற்கும்போது காவலனே கண்டுமனம் மயங்கவேண்டாம் பன்னவே யுந்தனுக்கு பிராணாயாமம் பாலிப்பாள் வாதமுடன் யோகமாற்கம் சொன்னபடி தப்பாது குறையுண்டானால் சூட்சமுடன் நீயறியுந் துரையில்நில்லே |