| கொள்ளாத மதிதமென்ற மகாரங்காணும் குறிப்பாக நகாரமல்லோ குருவைக்காட்டும் வள்ளாத மகாரமன்றோ மடங்கி அந்தந்தாண்டி வழிகாட்டும் இடமல்லோ கேசரிதான்மைந்தா மள்ளாத மகாரமென்ற மேலெழுத்தேயென்பார் மாட்டுவது மூன்றெழுத்துங் காணமாட்டார் அள்ளாத மகாரமென்ன மவுனவித்தை வாடீநுதிறவா மவுனமாமே |