| சுத்தமாஞ் செம்புக்கு வெள்ளிநாலு சகமடனே செம்பதுவும் ஒன்றேயாகும் முத்தமுடன் தங்கமது ஒன்றேயாகும் முயலான மூசைதனிலுருக்கிப்பாரு சித்தமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு தெளிவான மாற்றதுவு மதிகங்காணும் பத்தமுடன் புடத்துக்கு வுறுதித்தங்கம் பாலகனே சித்தர்செடீநுயும் வேதையாமே |