| இருந்திட்டேன் கோடிவரையுகாந்தகாலம் எழிலான சூட்சாதி வித்தையாவும் திருந்திடவே சீனபதி வுலகுள்ளோர்க்கு திட்டமுடன் கைமறைப்பு யாவுஞ்சொன்னேன் பொருந்திடவே யவர்களுடன் சேர்ந்துயானும் போகித்தேன் வெகுகோடி காலமப்பா செருந்திடவே போகமது செடீநுததாலே சிறப்பான போகனென்று பேருண்டாச்சே |