| ஏகினாரென்லுமே யாமறிந்து எழிலுடனே காலாங்கிநாதர்தம்மை பாகமுடன் தான்வணங்கி பணிந்துபோற்றி பதாம்புயத்தை என்னாளும் மனதிலுண்ணி வேகமுன் அடியேனும் பலநூல்பார்த்து வெளியான கருக்குருவும் வுரைக்கயெண்ணி போதமென்னும் பெருநூலேழாயிரத்தில் பொங்கமுடன் பாடிவைத்தேன் கருக்கள்தானே |